இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் ராஜேஷ், நாசர், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பல நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.