காப்பர் கம்பி திருடிய நபர் கைது
திருவையாறு தாலுகா செங்கிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேல்முருகன் இண்டஸ்ட்ரியல் கம்பெனியில் காப்பர் ஒயர் தொடர்ந்து காணாமல் போவதை முன்னிட்டு கம்பெனியின் மேலாளர் தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் செங்கிப்பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று(செப் 21) குற்றவாளியை கைது செய்து 142 கிலோ காப்பர் ஒயர் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 10000 பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.