
தஞ்சை: வரத்து அதிகரிப்பு; காய்கறிகள் விலை சரிவு
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மையப் பகுதியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதில் 71 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். காய்கறிகளை தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இல்லத்தரசிகள் பொதுமக்கள் வாங்கிச்செல்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தை விட நேற்று வரத்து அதிகமானதால் காய்கறிகளின் விலை கடும் சரிவடைந்தது. கத்தரிக்காய் கிலோ ரூ. 24க்கும், மணப்பாறை கத்திரிக்காய் ரூ. 26க்கும், வெண்டைக்காய் ரூ. 30க்கும், அவரைக்காய் ரூ. 66க்கும், புடலங்காய் ரூ. 26க்கும், பாகற்காய் ரூ. 66க்கும், பீர்க்கங்காய் ரூ. 50க்கும், பல்லாரி ரூ. 30க்கும், தக்காளி ரூ. 26க்கும், உருளைக்கிழங்கு ரூ. 36க்கும், சேனைக்கிழங்கு ரூ. 60க்கும், சேப்பங்கிழங்கு ரூ. 66க்கும், பீட்ரூட் ரூ. 48க்கும், பீன்ஸ் ரூ. 66க்கும், கேரட் ரூ. 56க்கும், சவ்வரிசி ரூ. 34க்கும், பச்சை மிளகாய் ரூ. 44க்கும், முள்ளங்கி ரூ. 40க்கும், கொத்தவரங்காய் ரூ. 36க்கும், மாங்காய் ரூ. 24க்கும், முட்டைக்கோஸ் ரூ. 24க்கும், பரங்கிக்காய் மற்றும் சுரைக்காய் தலா ரூ. 20க்கும், பூசணிக்காய் ரூ. 16க்கும், மல்லிக்கட்டு புதினாக்கட்டு தலா ரூ. 40க்கும் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவால் உழவர் சந்தைக்கு வந்த பெண்கள், பொதுமக்கள் காய்கறிகளை ஏராளமாக வாங்கிச் சென்றனர்.