அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் நேற்று (மார்ச். 25) டெல்லிக்கு சென்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு சட்டசபையில் பேசும் போது, “2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை தொடங்குவோம்" என பேசினார்.