
நாகர்கோவிலில் சாரண சாரணியர் பேரணி
நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் சாரண சாரணியர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. செல்போனை தவிர்ப்போம், புத்தகம் வாசிப்பதை நேசிப்போம் என்ற தலைப்பில் அவர்கள் உறுதிமொழி ஏற்று சிந்தனை நாள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு சென்று கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.