இந்தியா முழுவதிலும் உள்ள 35 சதவீத பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். NITI ஆயோக் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் உள்ள 36 சதவீத அரசுப் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்களும், 10 சதவீத பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களும் உள்ளனர். மேலும், ஆசிரியர்கள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை நிர்வாகப் பணிகளுக்குச் செலவிடுவதால், இது மாணவர்களின் கற்பித்தலை பாதிப்பதும் தெரியவந்துள்ளது.