
ராஜாக்கமங்கலம் அருகே ஆடு திருடியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே ஆடரவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது வீட்டின் எதிரில் உள்ள தோட்டத்தில் அவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.அதில் ஒரு ஆட்டை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களில் முத்துக்குமார் என்பவரை நேற்று (பிப்ரவரி 20) கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.