கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கீழப்புத்தேரி- புளியடி பைபாஸ் சாலையில் கனரக வாகனங்கள் தினமும் செல்வதால் ஏற்பட்ட புழுதி மணலால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பல முறை எச்சரித்தாலும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.
இருசக்கர வாகனம் பிரேக் பிடிக்கும் போது மணலால் விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஆகவே விரைந்து சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.