கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலை நகரில் படிப்பகம் உள்ளது. இந்த படிப்பகத்தின் மேற்கூரை இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த படிப்பகத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு படிப்பகத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.