நாகர்கோவில்: நண்பர் மீது தாக்குதல்.. போலீஸ் வழக்கு பதிவு

81பார்த்தது
நாகர்கோவில்: நண்பர் மீது தாக்குதல்.. போலீஸ் வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது நண்பர் பரமசிவம் (56). பரமசிவத்தை கனகராஜ் 'அத்தான்' என்று கூப்பிட்டதால், அவர் இனி அப்படி கூப்பிடக்கூடாது என்று கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டிலிருந்த கனகராஜை பரமசிவம் வெளியே அழைத்து, மண்வெட்டியால் பின்பகுதியால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கோட்டாறு போலீசார் பரமசிவம் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி