குமரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.