
குமரி: வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ. 10. 30 லட்சம் மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் ஜெயினுல் ஆப்தீன். இவர் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பி வருகிறார். இவரிடம் பாண்டியன், அவர் மனைவி சகாய ராணி ஆகியோர் தொடர்பு கொண்டு துபாய்க்கு 6 பேரை அனுப்புவதாக கூறி ரூ.10.30 லட்சம் வாங்கிக் கொண்டு போலி ஆவணங்களை கொடுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் போலீசார் இது தொடர்பாக நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.