கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவனத்தின் விளம்பரங்கள் எழுதும் பணி இன்று (பிப்-25) நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது. தகவல் அறிந்த பா. ஜ. க வடக்கு மாநகர தலைவரும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சுனில் குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் அரசு சுவரில் அரசு விளம்பரங்கள் தவிர தனியார் விளம்பரங்கள் எழுத கூடாது என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.