

குமரி: நரேந்திர மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் (VIDEO)
பா. ஜ. க. வின் 11 ஆண்டுகால ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு விரோதமாகவும், குறிப்பாக, சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராகவும், அவர்களின் சொத்துகளையும், உரிமைகளையும் பறிக்கின்ற வகையில் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து, தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்தியா கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.