கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் ஞானம் நகரில் அறம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் அடிமுறை மற்றும் சிலம்பம் வகுப்புகள் துவங்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவிளக்கேற்றி துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசும் மாணவர்களுக்கு பதக்கமும் வழங்கி பாராட்டினார்.