கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளை - கிறிஸ்டோபர் நகர் பகுதியில் 1. 2 கோடி ரூபாய் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மூலதன மானிய நீதியிலிருந்து 2 கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ், ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கட்டுமான பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிறதா?. , என்பது குறித்தும் கூடுதல் பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் கலாராணி, மாநகரப் பொருளாளர் சுதாகர், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.