குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனால் 2018 ஆண்டு நவீன எரிவாயு தகன மேடை விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், அந்த இடம் குப்பை கிடங்காக மாறிவருவதை இன்று பார்வையிட்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வடக்கு மண்டல தலைவர் சுனில் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.