வேங்கைவயல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை தண்டிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், தேரூர் பகுதியில் 350 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மக்களுக்காக வழங்கப்பட்ட இடத்தை குறுக்கு வழியில் அபகரிக்க நினைக்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும் நேற்று மாலை நாகர்கோவில் வடசேரியில் விசிக மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் கண்டன போராட்டம் நடைப்பெற்றது. இதில், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.