பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் இன்று (பிப். 26) தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிலையில் அவர் அளித்த பேட்டியில், "இனி தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழகத்தின் வெற்றிக் களமாகப் போகிறது, விஜய் தலைமையில் அவரின் கட்சியில் இணைகிறேன். இனி என் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் அவரின் வழியில் இருக்கும். இந்தி தான் கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது" என்றார்.