சாதி அரசியல் பேசும் கபடதாரிகள் என்று தவெக தேர்தல் குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெறும் தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவர், எங்களிடம் பணம் இல்லை, உழைப்பும், மக்கள் ஆதரவும் உள்ளது. பல்வேறு சூழ்ச்சிகளை செய்து நெருக்கடியில் இருந்த போது விஜய் என்னை அழைத்தார். ஊழலை ஒழிக்கும் சக்தியாக பெரியாரை முன்னிறுத்தி அரசியல் செய்வோம். மக்கள் பிரச்சனைக்காக சிறை செல்லவும் தயார் என்றார்.