மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர் சங்கம் (சி. ஐ. டி. யு. ) சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த 16-ந் தேதி பணி நேரத்தில் விபத்தில் மரணம் அடைந்த உடுமலைப்பேட்டை சுகாதார பெண் தன்னார்வலர் குடும்பத் துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தொற்றா நோய் பரிசோதனைக்காக பணி அமர்த்தப்பட்ட பணியாளர்களை தொற்று நோய் குறித்த பணிகளை வழங்கக் கூடாது, முதல் வாரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவி விக்னேஷ்வரி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்செல்வி, சி. ஐ. டி. யு. தமிழ் மாநில குழு உறுப்பினர் இந்திரா, பொருளாளர் சித்ரா, மாநில குழு உறுப்பினர் அந்தோணி உள் பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கேர்ஷங்களையும் எழுப்பினர்.