தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.