நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

56பார்த்தது
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகர்கோவில் கோணம் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன் கண்டன கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க அதிகார தேர்தலை சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக நடத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களின் பெயர்களை வருகை பதி வேட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012- இளஞ்சிவப்பு அட்டை வழங்கிய தொழிலாளர்களுக்கு தற்போது பச்சை அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் தன பாலன், பொதுச்செயலாளர் சரவணன், பொருளாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக்கழக கிட்டங்கிகளில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பங்கேற்றதால் கிட்டங்கிகளில் பொருட்களை ஏற்றவும், இறக்கவும் முடியாமல் பணிகள் முடங்கியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி