கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ். பி அலுவலகத்தில் பா. ஜ. க மாமன்ற உறுப்பினர் ரோஸிட்டா திருமால் இன்று (பிப் - 18) மனு அளித்தனர். அதில், “நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரான ஜெயசந்திரன் நடைபாதையில் கடை நடத்தி வருவதை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தியதால், ஆத்திரமடைந்த ஜெயசந்திரன் எனது கணவர் திருமால் மீது பொய்யான செய்திகளை பரப்பி உள்ளார்; எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.