கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் துறை பயிலும் மாணவ மாணவிகள் 39 பேரும் 3 ஆசிரியர்களும் மொத்தம் 42 பேர் நேற்று (பிப்ரவரி 18) இரவு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கேரளாவிற்கு சென்றனர்.
இன்று (பிப்ரவரி 19) கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட மூணாறு அருகே செல்லும்போது பேருந்து விபத்தில் சிக்கி இரு மாணவிகள் உயிரிழந்துள்ளனர். கனகபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் பிரிவு மாணவி வெனிகா, திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் பிரிவு மாணவி ஆதிகா ஆகியோர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பேருந்து விபத்தில் சிக்கி இரு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது