முந்திரி ஆலை தொழிலாளர்கள் குமரி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு பேருராட்சியில் புத்தன்சந்தை பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் முந்திரி ஆலையில் சுமார் 350 க்கும் மேற்ப்பட்ட ஏழை பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தனி நபர் ஒருவர் இந்த ஆலையில் புகை வருகிறது என்று கூறி, இந்த ஆலையை மூட முயற்சி செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி இன்று( செப்.18) முந்திரி ஆலை தொழிலாளர்கள் நாகர்கோவில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.