கன்னியாகுமரி மாவட்டம் மிளகு பறிப்பதற்காக சென்ற தோட்டத் தொழிலாளர்கள் ராமையன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கரடி கடித்து படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், அவர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்றுநேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவர்களின் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார்.