
துறையூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்தியான் (72). இவர் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த கரட்டாம்பட்டி தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த மாதம் 25ஆம் தேதி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.