புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் இங்கு விடுமுறை நாட்கள் மற்றும் வாரா நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வர் இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீர்வரத்து குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் புளியஞ்சோலை ஆற்றின் நீர் படிப்பு பகுதிகளில் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்தது இதைத்தொடர்ந்து புளியஞ்சோலை ஆற்றில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் புளியஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.