கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுண்டகிரி, கோபசந்திரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பீன்ஸ் சாகுபடி செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள், தற்போது பீன்ஸ் விலை ஏற்றம் காரணமாக புத்துணர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி உள்ளூர் சந்தைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 45 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்கின்றனர். வரத்து குறைவால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்தனர். இங்கு விளையும் பீன்ஸ் குறிப்பாக சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.