திருச்சி மாவட்டம் முசிறியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த சாலை பேரணி நடைபெற்றது பேரணிக்கு வட்டாட்சியர் லோகநாதன் தலைமை வகித்தார். முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியை முசிறி கோட்டாட்சியர் ஆரமுததேவசேனா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி சேலம் சாலை கைகாட்டி துறையூர் ரோடு காந்தி நகர் புலிவலம் சாலை வழியாக பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் மாணவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர். பேரணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி போலீசார் செய்திருந்தனர்.