துறையூர் - Thuraiyur

துறையூரில் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க பொதுக்கூட்டம்

துறையூரில் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க பொதுக்கூட்டம்

துறையூரில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க பொதுக்கூட்டம்!கோவில்களில் முடி இறக்கும் தொழிலாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க கோரிக்கை!திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் நகர கிளைச் சங்க பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் டாக்டர் சுரேஷ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட பொருளாளர் கலைமணி பதவி சான்றிதழ் வழங்கினார். விழாவில் மாவட்ட துணை தலைவர் செந்தில் குமார் மாவட்ட துணை இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக மருத்துவர் சமுதாயத்தை சார்ந்த ஒருவரை நலவாரியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும். திருக்கோயில் பணி புரியும் முடி இறக்கும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும்மருத்துவ சமுதாய மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவ சமுதாய மக்களுக்கு தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர். முடிவில் துணைத் தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా