கோடைகாலத்தில் மட்டும் கிடைக்கும் வெள்ளரிப்பழம் சர்க்கரையில் தொட்டு சாப்பிட அமிர்தமாக இருக்கும். வெள்ளரிப்பழத்தை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறையும், கண்கள் நலன்பெறும், உடல் எடை குறையும், மலச்சிக்கல் நீங்கும், சிறுநீரக கற்கள் வெளியேறும். மனஅழுத்தம் நீங்கி நல்ல உறக்கம் கிடைக்கும், இதயநோய் அபாயம் குறையும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சளி பிரச்சனையை சரி செய்யவும் வெள்ளரிப்பழம் உதவும்.