ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவப்படத்தை செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்திய துறையூர் திமுகவினர்.
பாராளுமன்றத்தில் முன்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பேசினார். அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தமிழக எம்பிக்கள் அநாகரிகமாக பேசுவதாகவும்அவர்கள் அநாகரிகமானவர்கள் எனவும் பேசினார்.
இதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவப்படத்தை செருப்பால் அடித்த திமுகவினர் அவரது உருவப்படத்தை தீயிட்டு கொழுத்தினர். இதனால் துறையூர் பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.