துறையூர் - Thuraiyur

திருச்சி: பேருந்து மோதி விபத்து.. அடையாளம் தெரியாத வாலிபர் பலி

திருச்சி: பேருந்து மோதி விபத்து.. அடையாளம் தெரியாத வாலிபர் பலி

திருச்சி சென்னை சாலையில் தனியார் டைல்ஸ் கடை அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரான ஸ்ரீவில்லிபுத்தூர் கொடிகுலத்தைச் சேர்ந்த கனிராஜாவை (வயது 39) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా