இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

85பார்த்தது
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. காலை 9.15 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்து 75,800 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 150 புள்ளிகள் குறைந்து 23,180 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. வங்கி, ரியல் எஸ்டேட், ஐடி, ஆட்டோ நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி