பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடாக ‘ரஷ்யா’ உள்ளது. ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய நாடு ரஷ்யா. அதன் பரப்பளவு சுமார் 17.098 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும், இது பூமியின் மொத்த பரப்பளவில் 11 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளது. சீனாவைப் போலவே, ரஷ்யாவின் எல்லையும் 14 நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகை 14 கோடி ஆகும். கனிம வளங்கள் நிறைந்த நாடாக இருந்தாலும் இன்னும் சரியாக ஆராயப்படாமல் உள்ளது.