திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா திருத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் சமையல் தொழிலாளி இவர் நேற்று துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டி அந்த ஊரில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது மர்ம நபர் ஒருவர் கார்த்திக்கின் வாயைப் பொதாதி அவரது சட்டைப் பையில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பினார்.
அவரை பின்தொடர்ந்து விரட்டியபோது அந்த நபர் கீரம்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் லெனின் குமார் என்பதே தெரியவந்தது இது தொடர்பாக கார்த்திக் துறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் லெனின் கைது செய்தனர் அவரிடம் இருந்து பணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து துறையூர் குற்றவியல் நடுவர் நர்மதா ராணி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.