திருச்சி மாவட்டம் துறையூரில் அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை அகற்றிய வட்டார போக்குவரத்து அலுவலர்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் வாகனங்களில் அதிகப்படியான ஒலி எழுப்பும் வகையான ஏர் ஹாரன்களை பொருத்தி ஒளி மாசு ஏற்படுத்தக் கூடாது என திருச்சி மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாநகர போக்குவரத்து போலீசார் அனைத்து விதமான வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் இதையும் மீறி சில வாகனங்களில் அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய வகையான ஏர்ஹாரண்களை பொருத்தி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிப்பதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இன்று துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஏர்ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகளை சோதனை இட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சோதனை மேற்கொண்டு 20 வாகனங்களில் ஒலி மாசை ஏற்படுத்தும் ஏர் ஹாரணங்களை அகற்றினர். அகற்றப்பட்ட ஏர்ஹாரண்கள் அதே பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் வைத்து உடைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு போக்குவரத்து ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.