முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

55பார்த்தது
முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஆர்முத்துதேவசேனா தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் லோகநாதன், சேக்கிழார், மோகன் முன்னிலை வகித்தனர். தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் 1200 வாக்குகளுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும், இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. 15 ஆண்டுகாலமாக இறப்புச் சான்றிதழ்கள் கொடுத்தும் இறப்புகள் நீக்கப்படவில்லை. 

வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக இறந்தவர்களின் பெயர்கள் குறித்து தகவல் அறிந்து பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். வாக்களித்த பின்பு சில சமயங்களில் பீப் சவுண்ட் வருவதில்லை. இதைத் தவிர்த்து வாக்களித்த பின்பு குரல் மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பெயர் இருந்தால் நீக்கம் செய்ய வேண்டும். வயதானவர்கள் வாக்களிக்க வீல்சேர் வசதி செய்யப்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி