துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் சோனி என்கிற இளவரசன். இவர் கோவிந்தபுரம் பிரிவுரோடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார் இளவரசனை விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார் இதை அடுத்து அவரை சோதித்த போலீசார் அவரிடம் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர் உடனே அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து துறையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.