குயின் மேரி 2 சொகுசு கப்பல் கரீபியன் தீவுகளில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் வழியாக இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் நகருக்கு இயக்கப்பட்டது. அதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்த நிலையில் அதில் பலருக்கு 'நோரோ' என்னும் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயத்தை இந்த வைரஸ் கொண்ட நிலையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.