துறையூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 38 தீர்மானங்கள் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நகராட்சி ஆணையர் பதிலளித்தார். துறையூர் பேருந்து நிலையம் விரிவாக்கம் தொடர்பாக அனைத்து உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு புதிய இன்ஜினியர் பிளான் அமைக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.