துறையூர்: சாலையில் சிமெண்ட் லோடு லாரி கவிழ்ந்து விபத்து

85பார்த்தது
துறையூர் நோக்கி லாரி ஒன்று சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. லாரி ஆனது துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது இதில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தை சென்ற நாகலாபுரத்தைச் சேர்ந்த செந்தில்வடிவு என்ற பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டது லாரி ஓட்டுனரான கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் போக்குவரத்தை சரி செய்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி