திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்வில் துறையூர் நகர ஒன்றிய நிர்வாகிகள், உப்பிலியபுரம் பேரூராட்சி ஒன்றிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.