`பழைய சோறு’ என்பது `பழைய சாதம்’, ’ஐஸ் பிரியாணி’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றினால், அடுத்த நாள் அது பழைய சோறு. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். உடலில் அதிகமாக இருக்கும் உடல் சூட்டை குறைக்கும். ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் தீர்வுதரும். புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.