திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளாக அரசாணை 33இல் திருத்தம் செய்து மீண்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரியும், அலுவலக உதவியாளருக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் ரூ15, 700 வழங்க கோரியும், சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரியும், தேர்தல் வாக்குறுதியாக அளித்த பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இன்று இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் இரண்டாம் கட்ட போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்யப் போவதாக தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.