'ஒரு குப்பை கதை’ ’லோக்கல் சரக்கு’ போன்ற படங்களில் நடித்துள்ள தினேஷ் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நடன கலைஞர்களுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தினேஷ் தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்த கெளரீசன் என்பவர் மீது தினேஷ் உள்ளிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.