துறையூர் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ருத்ர யாகம்

51பார்த்தது
துறையூர் ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மகா ருத்ர யாகம். 12 அடி உயரத்தில் நவதானியங்களால் ஆன சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு மகா ருத்ர யாகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதல் நாள் நந்தி கொடி ஏற்றுதல் கோ பூஜை தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து யாக பூஜைகள் விநாயகர் பூஜை ஸ்ரீ ருத்ரம் பாராயணம் மகா ருத்ர யாக கலச பூஜைகள் பூரணாகுதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகேஸ்வர பூஜையும் 12 அடி உயரத்தில் நவ தானியங்களால் அமைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி