

நெல்லை: அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாளை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். மருத்துவமனையை தரைமட்டமாக்கி விடுவேன் என்று மாநகர போலீசாரிடம் மர்ம நபர் நேற்றிரவு போனில் கூறியுள்ளார். உடனே போலீசார் அங்கு சென்று அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. வதந்தி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த உவரியை சேர்ந்த முத்து பெருமாளை போலீசார் இன்று பிடித்து விசாரிக்கின்றனர்.